டெல்லி - ஆதர்ஷ் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றிரவு திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர்  நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் தீயை அணைத்துள்ளனர். இருப்பினும் தீவிபத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் இது வரை வெளி வராத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.