பங்­க­ளா­தேஷில் நடை­பெறும் 21 ஆவது சர்­வ­தேச மாணவர் கல்­வித்­தர வட்ட சம்­மே­ள­னத்தில் கலந்து கொள்ள அகில இலங்கை ரீதி­யாக 160 மாண­வர்கள்  தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர்.

டாக்கா - டெபோடில் பல்­க­லையில் நேற்று ஆரம்பமாகிய  மேற்­படி சம்­மே­ளனம் 6 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது. அகில இலங்கை ரீதி­யாக 160 மாண­வர்கள் இதில் கலந்து கொள்­ள­வுள்­ளனர். இதில் சப்­ர­க­முவ மாகாணத்­தி­லி­ருந்து 120 மாண­வர்கள் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர்.

கடந்த 20 ஆவது சர்­வ­தேச மாணவர் கல்வித்தர வட்ட சம்­மே­ளனம் எம்­பி­லி­ப்பிட்­டி­யவில் நடை­பெற்­றது. இதில் சப்­ர­க­முவ மாகாண மாண­வர்கள் அதி­க­மானோர் திற­மையை வெளிக்காட்­டி­ய­மையால் அதி­க­மான மாண­வர்கள் இம் ­மா­கா­ணத்­தி­லி­ருந்து தெரிவு செய்­யப்பட்­டுள்­ள­தாக சப்­ர­க­முவ மாகாண கல்வி செய­லாளர் மஹிந்த வீர­சூ­ரிய தெரிவித்தார்.

இலங்கை, இந்­தியா, இங்­கி­லாந்து, சீனா, மலே­சியா, ஜப்பான் இபல்­கே­ரியா உட்­பட 15 நாடுகளை சேர்ந்த மாண­வர்கள் இதில் கலந்து கொள்­வ­துடன் இலங்கை மாணவர் அணிக்கு  சப்­ர­க­முவ மாகாண கல்வி செயலாளர் மஹிந்த வீரசூரிய தலைமை தாங்குவதுடன் அதிபர், அதிகாரிகள் 10 பேரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.