டொனால்ட் டிரம்ப் ஜனா­தி­ப­தி­யாக முடி­யாது

Published By: Raam

18 Feb, 2016 | 08:19 AM
image

குடி­ய­ரசுக் கட்சி வேட்­பாளர் டொனால்ட் டிரம்ப் ஜனா­தி­ப­தி­யாக முடி­யாது. ஏனெனில் அது கடு­மை­யான பணி­யொன்­றாகும் என அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா தெரி­வித்­துள்ளார்.

"டொனால்ட் டிரம்ப் ஜனா­தி­ப­தி­யாக முடி­யாது என்­பதை நான் தொடர்ந்து நம்­பு­கிறேன். ஏனெனில் நான் அமெ­ரிக்க மக்­க­ளிடம் மிகுந்த விசு­வா­சத்தைக் கொண்­டுள்ளேன்" என பராக் ஒபாமா கூறினார்.

டொனால்ட் டிரம்ப் குடி­ய­ரசுக் கட்­சிக்­கான உட்­கட்சி வாக்­கெ­டுப்பில் முன்­னணி வேட்­பா­ள­ராக உள்ளார்.

அவர் ஏற்­க­னவே நியூ­ஹம்­ஸி­யரில் இடம்­பெற்ற உட்­கட்சி வாக்­கெ­டுப்பில் வெற்றி பெற்­றுள்ளார். அதே­ச­மயம் எதிர்­வரும் சனிக்­கி­ழமை உட்­கட்சி வாக்­கெ­டுப்பு நடை­பெ­ற­வுள்ள தென் கரோ­லினா பிராந்­தி­யத்­திலும் அவர் முன்­னி­லையில் உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் அமெ­ரிக்க கலி­போர்­னிய மாநி­லத்தில் இடம்­பெற்ற ஆசியான் உச்­சி­மா­நாட்டில் உரை­யாற்­றிய அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபா­மா­விடம் டொனால்ட் டிரம்ப்பைப் பற்றி என்ன நினைக்­கி­றீர்கள் என ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் வின­விய போதே அவர் மேற்­படி கருத்தை வெளி­யிட்­டுள்ளார்.

"ஜனா­தி­பதி பணி என்­பது உரை­யாடல் நிகழ்ச்சி, நேரடி ஒளிப­ரப்பு நிகழ்ச்­சியில் கலந்து கொள்­வது போன்­ற­தல்ல. இது சந்­தைப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­யொன்­றல்ல. இது கடி­ன­மா­ன­தாகும்" என அவர் கூறி னார்.

"வாக்­கா­ளர்கள் அவரைத் தெரிவு செய்­ய­ மாட்­டார்கள். அவர்கள் ஜனா­தி­பதி தொழில் தீவி­ர­மான ஒன்­றென்­பதை அறி­வார்கள்" என அவர் தெரி­வித்தார்.

அதற்கு டொனால்ட் டிரம்ப் பதி­ல­ளிக்­கையில், நாட்­டிற்கு பெரும் சேதத்தை விளை­விக்கக் கூடிய செயற்­பா­டு­களை மேற்­கொண்ட ஜனா­தி­ப­தி­யொ­ரு­வரால் முன் வைக்கப்பட்டுள்ள குற்­றச்சாட்டா கும்"் என்று தெரி­வித்தார்.

டொனால்ட் டிரம்ப் அமெ­ரிக்­கா­வி­லுள்ள 11 மில்­லியன் ஆவ­ணப்­ப­டுத்­தப்­ப­டாத குடி­யேற்­ற­வா­சி­களை நாட்டை விட்டு வெளியேற்றுதல், முஸ்லிம்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதை தடுத்து நிறுத்தல் உள்ள டங்கலான சரச் சைக்குரிய கடும் போக்குக் கொள் கைகளை முன் வைத்துள்ளமை குறிப்பிட த்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47