குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை தாக்கியதில் படுகாயமடைந்த மனைவி  திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

 திருகோணமலை – பாலையூற்று பிரதேசத்தில் கணவரின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்திருந்த பெண் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்.