போதைப்பொருள் கடத்தலை தடுப்புக்கான கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கையும், இந்தியாவும் தீர்மானித்துள்ளன.

இலங்கை போதைப்பொருள் தடுப்பு பணியகத்தைச் சேர்ந்த பிரதி பொலிஸ்மா அதிபர், சஞ்ஜீவ மெதவத்தின் தலைமையிலான குழு இதில் பங்கேற்றுள்ளது.

இதன்போது போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான புதிய யுக்திகள் குறித்து விரிவாக ஆராயப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஆறு இலங்கையர்கள் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் ஹெரோயின், கஞ்சா, ஹஸீஸ் மற்றும் கொக்கேய்ன் போன்ற போதைப்பொருட்களை கடத்தும் போது கைதுசெய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.