கட்டுநாயக்கா விமான நிலையத்தில் உள்ள வர்த்தக நிலையத்தில் ( duty free shop ) பணிபுரியும் ஊழியர் ஒருவர் 7 கிலோ தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளாரென விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து மீட்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 40 மில்லியன் ரூபாவென அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த நபரிடம் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.