இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசிற்காக எவரையும் தெரிவு செய்யவில்லையென  ஸ்விடிஷ் அக்கடமி அறிவித்துள்ளது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசினை முடிவு செய்யும் ஸ்வீடிஷ் அக்கடமி பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் இந்த ஆண்டு விருதுக்கு எவரையும் தேர்வு செய்யப்போவதில்லை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு இலக்கிய நோபல் பரிசுக்குரியவரை 2019 ஆம் ஆண்டு பரிசுக்குரியவரோடு அடுத்த ஆண்டே தெரிவு செய்யவுள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மக்களின் நம்பிக்கை குறைந்திருப்பதே இந்த முடிவுக்குக் காரணம் என அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.