20 ஆம் திருத்தம் குறித்து ஜே.வி.பியுடன் கூட்டமைப்பு பேச்சுவாத்தை நடத்தும். - சுமந்திரன் 

Published By: Daya

04 May, 2018 | 04:28 PM
image

 (ஆர்.யசி)

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்க வேண்டும் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடையே மாற்றுக்கருத்து இல்லை. எனினும் ஜே.வி.பி தனியே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை இலக்கு வைக்காது இனப்பிரைசினைகாக தீர்வினையும் உள்ளடக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 20ஆம் திருத்தம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு - மக்கள் விடுதலை முன்னணியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதுடன் ஜே.வி.பி இணங்கும் பட்சத்தில் பிரரனையை ஆதரிக்கும் என தெரிவித்தது.  

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி 20ஆம் அரசியல் அமைப்பு திருத்தம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து வினவிய போதே கூட்டமைப்பினர்  இதனைக் குறிப்பிட்டனர்.

இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் குறிப்பிடுகையில்,

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்குவது என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாட்டில் ஒன்றாகும்.

நிறைவேற்று ஜனதிபதி முறைமையினை நீக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநாடுகளில் நாம் தொடர்ச்சியாக இந்த நிலைபாட்டினை சுட்டிக்காட்டியுள்ளதுடன் தீர்மானங்களும் நிறைவேற்றியுள்ளோம்.

ஆகவே எமது இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல்  புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் நோக்கத்தில் அதற்கான பணிகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப்போது அவை இடை நடுவே நிறுத்தப்பட்டுள்ளது.

இதிலும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவது என்பது பிரதான காரணியாக உள்ளடக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் மிக முக்கிய விடயமாக உள்ளது. இந்த நாட்டின் மிக நீண்டகால இனப்பிரச்சி தீர்க்கப்பட வேண்டியது அத்தியாவசியமான விடயமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19