தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில்  பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தின் பின்னர் இடம்பெற்ற அனைத்து விடயங்களையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் நான் இருக்கின்றேன் என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டகிராமில் தனது எதிர்கால மனைவி மற்றும் வளர்ப்பு நாய்களுடன் காணப்படும் புகைப்படத்தை வெளியிட்டு தனக்கு வழங்கிய ஆதரவிற்காக  ஸ்மித் நன்றி தெரிவித்துள்ளார்.

அதன்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தனக்கு ஆதரவு தெரிவித்து நம்பமுடியாத அளவிற்கு மின்னஞ்சல்களும் கடிதங்களும் வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்காக நான் எதனையாவது திருப்பி செய்யவேண்டிய தருணம் இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.