சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் இருக்கிறார்கள். இவர்களுக்கு வைத்தியர்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என எச்சரித்து, அதற்குரிய மருந்து மாத்திரை மற்றும் உணவு பழக்க வழக்கங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறார்கள்.

ஆனால் நாம் மறதி மற்றும் பணிப்பளு காரணமாக இதனை சரியாக கடைபிடிப்பதில்லை. இதன் விளைவு கால்களில் எரிச்சல், பாதங்களில் எரிச்சல், பாதங்களில் உணர்வு குறைதல் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.

இரத்த சர்க்கரையின் அளவில் ஏற்படும் மாற்றங்களால் தான் கால்களில் எரிச்சல், கால்களில் இரவு நேரத்தில் அரிப்பு, கால்கள் மரத்து போதல், கால்கள் மதமதவென இருத்தல் போன்றவை நிகழும். இதற்கு இரத்த சர்க்கரையின் அளவில் ஏற்படும் மாறுபாடுகளால் கால்களில் உள்ள நரம்புகள் தங்களின் இயல்பான வலிமையை இழக்கத் தொடங்குகின்றன.

இந்நிலையில் மருத்துவர்கள் இரத்த சர்க்கரையின் அளவின் குறைபாடுகளால் கால் நரம்பு எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள இவ்வகையான பரிசோதனையை மேற்கொள்கிறார்கள்.

கால்களின் தொடு உணர்வு, அதிர்வு உணர்வு, வெப்ப உணர்வு, குளிர் உணர்வு போன்றவற்றின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதையும், கால்களில் எந்த நரம்பு எந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் கண்டறிகிறார்கள்.

அதன் பின் இதற்குரிய சிகிச்சையை அளிக்கிறார்கள். அத்துடன் இரத்த சர்க்கரையின் அளவை ஹெச் பி.ஏ.1.சி. என்ற பரிசோதனை மூலம் துல்லியமாக கண்டறிந்த பின்னரும் இத்தகைய பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

டொக்டர் கணேசன்