பேர்த் விமானநிலையத்தில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலை மயிரிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது.

குவன்டாஸ் விமானசேவையை சேர்ந்த இரு விமானங்களே இவ்வாறு மயிரிழையில் மோதிக்கொள்ளும் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

சிட்னியில் இருந்து புறப்பட்டு வந்த ஒரு விமானம் தரையிறங்கிய வேளை அதற்கு மிக அருகில் மற்றொருவிமானம் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 சிட்னியிலிருந்து வந்த விமானத்தின் விமான ஓட்டி தனது விமானத்தை நிறுத்தவேண்டிய பகுதியில் நிறுத்தாமல் தொடர்ந்து சென்றுகொண்டிருந்ததன் காரணமாகவே  இந்த விபத்து ஏற்படும் நிலை உருவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பிரிவினர் இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.