சிரியாவில் இரசாயன ஆயுதத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை தோண்டி எடுக்கவேண்டியுள்ளதாக சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் உடல்களில் இருந்து மாதிரிகளை எடுப்பதற்காக அவர்களின் உடல்களை புதைகுழிகளில் இருந்து வெளியே எடுக்கவேண்டும் என சர்வதேச இரசாயன ஆயுத கண்காணிப்பு அமைப்பின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே புதைக்கப்பட்ட உடல்களை வெளியில் எடுத்து மாதிரிகளை சேகரிக்க விரும்புகின்றோம் என அந்த அமைப்பின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சிரியாவில் இரசாயன ஆயுதத் தாக்குதல்கள் இடம்பெற்ற பகுதியில் மாதிரிகளை சேகரித்துள்ள ஐ.நா. குழுவினர் தாக்குதல்கள் குறித்த அனைத்து ஆதாரங்களையும் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.