கலஹா – புப்புரஸ்ஸ – லெவலன்ட் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகள் இன்று பொது மக்களுக்கு கையளிக்கப்பட்டன.

 பசும்பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ், தலா 7 பேர்ச்சஸ் காணியில் நிர்மாணிக்கப்பட்ட  வீடுகள் கையளிக்கும் நிகழ்வில், அமைச்சர்களான பழனி திகாம்பரம் மற்றும் லக்ஸ்மன் கிரியல்ல ஆகியோருடன் மேலும் பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடுகளை கையளிக்கும் நிகழ்வு, புப்புரஸ்ஸ – லெவலன் தோட்டத்தில்  இடம்பெற்றுள்ளது.