உலகில் மிகமோசமான ஒடுக்குமுறை மற்றும் துஸ்பிரயோக நடவடிக்கைகளில் வடகொரியா அரசாங்கம் ஈடுபடுவதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சு குற்றம்சாட்டியுள்ளது.

வடகொரிய ஜனாதிபதியின் நோக்கங்களை  டிரம்ப் பாராட்டியுள்ள ஓரிரு தினங்களிற்குள் அமெரிக்கா இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சு தனது புதிய அறிக்கையில் வடகொரியாவின் தசாப்தகால மனித உரிமை மீறல்களை கடுமையாக விமர்சித்துள்ளது.

கடந்த 60 வருடங்களாக வடகொரிய மக்கள் தமது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் மனித உரிமை மீறல்களை சந்தித்துள்ளனர் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிறுவர்கள் உட்பட ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் சிறைகளில் வாடுகின்றனர் என தெரிவித்துள்ள அமெரிக்கா, வடகொரியா அரசாங்கம் அடிப்படை உரிமைகளை முற்றா மறுக்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.

வடகொரியாவிலிருந்து தப்பியோட முயல்பவர்கள் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுகின்றனர் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.