ஹொரவ்பொத்தான – துடுவெவ வனப்பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள யானை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த யானை சுமார் 9 அடி உயரமான 25 வயதான அளவில் இருக்கலாம் என அது, ஒரு மாதத்திற்கு முன்னர் இறந்திருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கிராமவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய வனவிலங்கு அதிகாரிகளால் நேற்று பிற்பகல் இந்த யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த யானையின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை அநுராதபுரம் - பண்டுலகம வனவிலங்கு மருத்துவ காரியாலயத்தின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர். 

இது தொடர்பாக ஹொரவ்பொத்தான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.