நுவரெலியா – கந்தப்பளை பார்க் தோட்டத்தில் 3 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய  சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில்  சிறுமிகளின் தந்தை, சிறிய தந்தை உள்ளிட்ட நால்வரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்துடன், சிறுமிகளின் தாயார் தொடர்பு பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

14, 15 மற்றும் 16 வயது சிறுமிகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த மூவரும் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த  சிறுமிகள் வழங்கிய தகவலுக்கு அமைய, கந்தப்பளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு சிறுமிகளின் தந்தை உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இதுதொடர்பாக  மேலதிக விசாரணைகளை கந்தப்பளை பொலிஸார்ர் மேற்கொண்டு வருகின்றனர்.