அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் ஏற்பட்ட இராணுவ விமான விபத்தில் 09 பேர் பலியாகியுள்ளனர்.

த பூர்டோ ரிகோ எயார் நெசனல் கார்ட் எனும் நிறுவனத்திற்கு சொந்தமான டப்லியு.சி.130 ரக சரக்கு விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஜோர்ஜியாவில் இருந்து அரிசோனா மாநிலத்தின் டக்சன் எனும் இடத்திற்கு செல்லுகையில் சவன்னா எனும் இடத்தில்  விபத்துக்குள்ளானதில் குறித்த விமானத்தில் பயணித்த 09 பேரும் உயிரிழந்துள்ளனர்.

 

கடந்த 30 வருடங்களாக குறித்த நிறுவனத்தினால்  பயன்படுத்தப்பட்டு வந்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.