இந்தியாவின் வடமாநிலங்களில் ஏற்பட்ட புழுதி புயலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை நூறையும் தாண்டி விட்டதாக அந் நாட்டு அதிகாரிகள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை நேற்று இரவு  திடீரென தாக்கிய புழுதி புயலில் சிக்கியே நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

புழுதி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து அளிக்கும்படி அந்தந்த மாநில அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகளுக்கு, 

புழுதி புயல் மற்றும் கனமழையால் 77 பேர் பலி!!!