பர்க்கின்சன்ஸ் நோய் எனப்படும் உடல் இயக்க கோளாறுகளுக்கு தற்போது டீப் ப்ரைய்ன் ஸ்டிமுலேசன் என்ற நவீன சத்திர சிகிச்சை மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது.

மூளையில் ஏற்படும் நரம்பியல் மற்றும் நரம்பு மண்டலத்தின் செயற்பாட்டில் ஏற்படும் சிக்கல்களுக்கு தான் பர்க்கின்சன்ஸ் பாதிப்பு என்கிறோம். இதன் காரணமாக கை, கால், மூட்டு மற்றும் சில பகுதிகளை அசைக்க இயலாத நிலை ஏற்படும். மூளை சார்ந்த பாதிப்பு என்பதால் உடல் இயக்கமும் சீராக இருக்காது.

இத்தகைய பாதிப்புடன் இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் மருந்து மாத்திரைகளின் மூலம் உடல் இயக்கக் குறைபாட்டை ஒரு கட்டுக்குள் வைத்திருப்பார்கள். ஒரு சிலருக்கு இந்த மருந்துகள் ஒரு கட்டத்தில் பலனளிக்காத போது, அதாவது கை கால்களில் கடுமையான நடுக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது மூட்டுகள் மிருதுவாக இல்லாமல் கடினப்பட்டு இருந்தாலோ அவர்களை இந்த நவீன சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்த பரிந்துரைப்பார்கள்.

டீப் ப்ரைய்ன் ஸ்டிமூலேசன் எனப்படும் இந்த சிகிச்சையின் போது,மூளையின் ஆழ் பகுதிக்குள் சிறிய அளவிலான மின்கருவிகள் பொருத்தப்படும். இதற்காக மூளையில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு பகுதிகளில் சிறிய அளவில் துளையிடப்பட்டு இந்த மின் கருவிகளை பொருத்துவார்கள். இந்த கருவிகள் இயங்குவதற்குரிய பற்றரிகளை நெஞ்சுப்பகுதியில் பொருத்துவர். இத்தகைய சிகிச்சைக்கு பின்னர் அவர்களின் கை, கால் நடுக்கம் குறைந்துவிடும். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பிலும், வழிகாட்டலிலும் இருக்கவேண்டும். 

டொக்டர் சங்கர்