இந்தியாவின் தேனி மாவட்டம்  ஆண்டிப்பட்டி அடுத்த மறவப்பட்டியில் சித்திரை மாதம் கொண்டாடப்படும் கோயில் திருவிழாவில் ஒருவொருக்கொருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த பகுதியில் வாழும் மாமன் - மைத்துனர்கள் ஒருவருக்கொருவரை துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது. அப்படி அடித்துக் கொள்வதால் குடும்பத்தில் நிலவும் பிரச்னைகள் நீங்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.