ஐ.பி.எல். போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஐ.பி.எல். போட்டிகளின் 11 ஆவது போட்டித் தொடரின் 33 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ள இந்த  போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

டோனி தலைமையிலான சென்னை அணி விளையாடிய 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்வியுடன் மொத்தம் 12 புள்ளிகளுடன் மிகவும் வலுவான நிலையில் முதலிடத்தில் உள்ளது.

கொல்கத்தா அணி 8  போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்விகளுடன் மொத்தம் 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலுள்ளது.

ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 17 முறை மோதியுள்ளன. இதில் சென்னை அணி 11 வெற்றிகளையும் கொல்கதா அணி 6 வெற்றிகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.