கல்குடா மதுபான உற்பத்திச்சாலை ;  ஊடகவியலாளர்களைத் தாக்கிய வழக்கு ஒத்திவைப்பு

Published By: Daya

03 May, 2018 | 02:24 PM
image

கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் எத்தனோல்  மதுபான உற்பத்திச்சாலை தொடர்பாக அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவரும் தாக்கப்பட்ட நிலையில் அவர்களால் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு கடந்த 14 மாதங்களாக இடம்பெற்று வருகின்ற நிலையில் தற்போது குறித்த வழக்கு மே மாதம் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக  நீதவான் தெரிவித்தார்.  

மட்டக்களப்பு கல்குடா கும்புறுமூலைப் பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்ற எத்தனோல் உற்பத்திச்சாலை தொடர்பாக கடந்த வருடம் 2017 மார் 22 ஆம் திகதி செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களான நல்லதம்பி நித்தியானந்தன் மற்றும் புண்ணியமூர்த்தி சசிதரன் ஆகியோர் மேற்படி உற்பத்திச்சாலையில் இருந்தவர்களால் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த வழக்கு மே மாதம் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

‪மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்ச்சைக்குள்ளான கல்குடா கும்புறுமூலை வேம்பு பகுதியில் 24 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுவருகின்ற எத்தனோல் மதுபான உற்பத்திச்சாலை தொடர்பாக எழுந்த அதிருப்தியை அடுத்து தமிழ் முஸ்லிம் சிங்கள சிவில் சமூகங்களும், சமய அமைப்புக்களும், அரசியல்வாதிகளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த நிலையில் கண்டனங்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06