ஊடகவியலாளர் கீத்நொயர் 2008 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சர் சரத்பொன்சேகாவிடம் வாக்குமூலமொன்றை பெறுமாறு கல்கிசை நீதிவான் லோச்சன அபயவிக்கிரம இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கீத்நொயர் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளை நீதிவான் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவிற்கு எதிராகவே ஆரம்பத்தில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதால் அவரையும் விசாரணை செய்யவேண்டும் கீத்நொயர் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எனினும் சரத்பொன்சேகாவின் வாக்குமூலத்தை ஏற்கனவே தாங்கள் பெற்றுக்கொண்டுவிட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் சரத்பொன்சேகாவை மேலும் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என சட்டத்தரணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்தே தேவைப்பட்டால் சரத்பொன்சேகாவின் வாக்குமூலத்தை பெறுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.