பேஸ்புக் தகவல் திருட்டு விவகாரத்துடன் தொடர்புடைய கேம்பிரிஜ் எனலிடிக்கா (Cambridge Analytica ) அரசியல் ஆலோசனை நிறுவனம் மூடப்படவுள்ளதாக தெரிவித்தனர். 

87 மில்லியன் பேரின் தனிப்பட்ட தரவுகள், வினாடி வினா செயலியொன்றினூடாக திரட்டப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் தமது நிறுவனத்திற்கான வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக Cambridge Analytica, தெரிவித்துள்ளது.

அரசியல் வாடிக்கையாளர்களுக்கு தனியாரின் பிரத்தியேக தகவல்களை முறையற்ற விதத்தில் வழங்கியதாக குறித்த நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனம் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் தமது நடவடிக்கைகளை நிறுத்தவுள்ளதாக  தெரிவித்துள்ளது. 

 இடம்பெற்ற முறைகேடு மீள நிகழாமை தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.