திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அரை கிலோ கேரள கஞ்சா வைத்திருந்த நபரொரு நேற்று  பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த நபர் 44 வயதான அக்போபுர பகுதியைச் சேர்ந்தவர் என  பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் அப்பகுதியில் கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கந்தளாய் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் அரை கிலோ கேரள கஞ்சாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.