இரு பெண்களின் பிரச்சினைகளை தனது மந்திரத்தால் சரிசெய்வதாக கூறி பாலியல் சேட்டைபுரிந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் குறித்த பிரதேச வாசிகளுக்கு மந்திரம் செய்வதில் பிரசித்தி பெற்றிருந்த நிலையில் குறித்த  இரு பெண்களும் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்வதற்காக சென்றபோதே பாதிக்கப்பட்டதாக கலேவெல பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.  

குறித்த  பெண் மாமியாருடன் ஏற்பட்ட பிரச்சினையை தீர்த்துக்கொள்வதற்காகவும், மற்றொரு பெண் பிள்ளை பேற்றை பெற்றுக்கொள்வதற்காகவும் குறித்த மந்திரவாதியிடம்  தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவதற்காக சென்றதாக தெரிவித்தனர். 

குறித்த இரு பெண்களும் தங்களின் பிரச்சினைகளை தீர்த்துகொள்வதற்காக மந்திரவாதியை குறித்த வீட்டில் அடிக்கடி சந்தித்த நிலையில், கடந்த 28 ஆம் திகதி இரு பெண்களையும் குறித்த வீட்டுக்கு வரவளைத்து  குறித்த சந்தேக நபர் இரு பெண்களின் உடலுக்கு எண்ணெய் தேய்க்க ஆரம்பித்து தவறான நடவடிக்கையில் ஈடுப்பட்டதால்  இரு பெண்களும் பாதிக்கப்பட்டதையடுத்து  தமது உறவினர்களுக்கு தெரிவித்த நிலையில் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதுதொடர்பான  மேலதிக விசாரணைகளை  கலேவெல பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.