(எஸ்.ரவிசான்)

நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல்  உட்பட நாட்டிற்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நாடளாவிய ரீதியில் ஒன்றினைந்த எதிர்க்கட்சியினரால் முன்னெக்கப்படும் தேங்காய் உடைத்தல் நடவடிக்கையின் அடுத்தக்கட்டமானது  சிங்கப்பூரில்   முன்னெக்கப்படவுள்ளதாக மஹிந்த ஆதரவு எம்.பி பந்துல  குணவர்தன தெரிவித்தார். 

நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மக்களுக்கு எதிரான தொடர்ச்சியான செயற்பாடுகளினால் அரசின் ஆயிட்காலமானது குறைந்து வருவதாகவும்  அவர்  சுட்டிகாட்டினார். 

கொழும்பில் அமைந்துள்ள என்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் இன்று புதன்கிழமை  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மஹிந்த ஆதரவு எம்பியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய பந்துல குணவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.