லிந்துல  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை தோட்டத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஒரு வீடு முற்றாக சேதமாகியுள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மட்டுக்கலை தோட்டத்திலுள்ள 10 ஆம் இலக்க நெடுங்குடியிருப்பிலுள்ள முதலாவது வீட்டில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். 

குறித்த நெடுங்குடியிருப்பின் ஏனைய வீடுகளுக்கு தீ பரவாது பிரதேச மக்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக  மேலதிக விசாரணைகளை  லிந்துல பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.