ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை குறித்து விசாரணை செய்த நீதிவான் பிணை கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். 

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணாயக்கார இம்மாதம் 14ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு கல்கிஸ்ஸ பிரதான நீதிவான் மொஹமட் மிஹாயில் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.

 குறித்த கொலை சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதால் சந்தேகநபரை விடுவிக்க விசாரணை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.