பிறப்­பு­றுப்பை வெட்டியெறிந்த மருத்­துவர் : காரணம் இதுதான்.!

Published By: Robert

01 May, 2018 | 02:57 PM
image

கர்­ப்பிணி  பெண் ஒரு­வ­ருக்கு  தங்­க­ளது மருத்­து­வ­ம­னையில் எடுக்­கப்­பட்ட ஸ்கேன் முடிவில் பெண் குழந்தை பிறக்க உள்­ள­தாக   வந்த முடி­வுக்கு  மாறாக ஆண் குழந்தை பிறந்­த­மையால் குழந்­தையின் பிறப்­பு­றுப்பை வெட்டிக் கொலை செய்த கொடூர மருத்­து­வரை   பொலிஸார்  வலை­வீசி தேடி வரு­கின்­றனர்.

கருக்­கா­லத்தின் போது வயிற்றில் இருக்கும் சிசுவின் பாலி­னத்தை பெற்­றோ­ருக்கு தெரி­யப்­ப­டுத்­து­வது  இந்­தி­யாவில் தடை செய்­யப்­பட்ட, சட்­ட­வி­ரோத, தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஆகும். 

இந்­நி­லையில், ஜார்கண்ட் மாநி­லத்தின் சத்ரா பகு­தியில் வசிக்கும் அனில் பான்டா என்­பவர் எட்டு மாத கர்ப்­பி­ணி­யான தனது மனை­விக்கு பிர­சவ வலி ஏற்­பட்­டதும் அருகில் இருக்கும் தனியார் மருத்­து­வ­ம­னைக்கு அழைத்து சென்­றி­ருக்­கிறார். 

அந்த மருத்­து­வம­னையில் உரி­மை­யா­ள­ரான மருத்­துவர் அருண் குமார் என்­பவர், பான்­டாவின் மனை­விக்கு வழங்­கப்­பட வேண்­டிய மேல்­சி­கிச்­சைக்­காக வேறு ஒரு மருத்­து­வ­ம­னைக்கு அழைத்து செல்ல அறி­வு­றுத்­தி­யுள்ளார்.

இதைத் தொடர்ந்து உட­ன­டி­யாக மற்­றொரு மருத்­து­வ­ம­னைக்கு தன் மனை­வியை அழைத்து சென்றார். அங்கு உட­ன­டி­யாக அனு­ம­திக்­கப்­பட்ட அவ­ருக்கு கருவில் இருக்கும் பாலி­னத்தை கண்­ட­றியும் 'அல்ட்­ரா­சவுண்ட் ஸ்கேன் 'செய்­யப்­பட்­டது. 

அதன்­மு­டி­வுப்­படி, பான்­டாவின் மனை­விக்கு பெண் குழந்தை தான் பிறக்கும் என்று அனுஜ் குமார் என்னும் மருத்­துவர்  உற­வி­னர்­க­ளிடம் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

எனினும், ஸ்கேன் சோதனை முடி­வுக்கு முர­ணாக பான்­டாவின் மனை­விக்கு அழ­கான ஆண் குழந்தை பிறந்­தது. தன் குழந்­தையை பார்க்க மருத்­து­வம­னைக்கு பான்டா விரைந்தார். 

ஆனால், பிறந்த தனது குழந்தை உயி­ரற்ற நிலையில் இருந்­தது. அவ­ருக்கு பேர­திர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது. குழந்தை உயி­ரி­ழந்­தது குறித்து பொலி­ஸா­ருக்கு உட­ன­டி­யாக தகவல் அளிக்­கப்­பட்­டது.

விசா­ர­ணையில் ஸ்கேன் முடி­வுக்கு மாறாக ஆண் குழந்தை பிறந்­ததால், குழந்­தையின் பிறப்­பு­றுப்பை மருத்­துவர்  வெட்­டி­யதால் குழந்தை இறந்­தி­ருப்­பது தெரி­ய­வந்­தது. இவ்­வி­வ­கா­ரத்தில் தொடர்­பு­டைய அருண் குமார், அனுஜ் குமார் ஆகிய இரண்டு மருத்துவர்கள் மீதும் பொலிஸார் வழக்­குப்­ப­திவு செய்­துள்­ளனர். தலை­ம­றை­வாக இருக்கும் அவர்­களை கைது செய்ய வலை­வீசி தேடி வரு­கின்­றனர்.

உரிய அனு­மதி பெறாமல் சட்­ட­வி­ரோ­த­மாக மருத்­து­வ­ம­னையில் 'அல்ட்­ரா­சவுண்ட்' இயந்­தி­ரங்­களை நிறுவி, கருவில் வளரும் சிசு ஆணா? பெண்ணா? என்று சோத­னை­களை நடத்தி, அதற்­காக இவர்கள் பெருந்­தொ­கையை கட்­ட­ண­மாக பெற்று வந்­த­தாக உள்­ளூர்­வா­சிகள் தெரி­விக்­கின்­றனர்.

தலை­ம­றை­வாக இருக்கும் மருத்­து­வர்கள் இயக்கி வந்த இரண்டு மருத்­து­வ­ம­னை­க­ளுக்கும் சீல் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக சத்ரா மாவட்ட அரசு மருத்­து­வ­ம­னையின் மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் எஸ்.பி. சிங் தெரி­வித்­துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17