ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் நான்காவது அமைச்சரவை மறுசீரமைப்பு தற்போது ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது,

மஹிந்த அமரவீர விவசாய அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். துமிந்த திஸாநாயக்க நீர்வழங்கல் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


இதேவேளை, லக்ஷ்மன் கிரியெல்ல, அரச கைத்தொழில் முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.


விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆய்வுகள் திறன் அபிவிருத்தி அமைச்சராக சரத் அமுனுகமவும், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சராக எஸ்.பி.நாவின்னவும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.


நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சராக தலதா அத்துக்கோரளவும் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டாரவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராக ஹபீர் ஹாஷிமும் சமூகவலுவாக்கல் அமைச்சராக பி. ஹரிசனும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.


நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக துமிந்த திஸாநாயக்கவும் தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் உத்தியோகபூர்வ மொழிகள் அமைச்சராக மனோகணேசனும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

திட்ட முகாமைத்துவம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சராக சாகலரத்நாயக்கவும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சராக டி.எம்.சுவாமிநானும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.


கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமப்புற பொருளாதாரம் அமைச்சராக விஜித் விஜயமுனி செய்சாவும்  விளையாட்டுத்துறை, மாகாண சபை மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சராக பைசர் முஸ்தபாவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சராக ரவீந்திர சமரவீரவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.


வனசீவராசிகள் அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவும் சமூக நலம் மற்றும் முதன்மை தொழிற்துறை அமைச்சராக தயா கமகேயும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.