அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் வருகை தந்துள்ளார்.

இந்நிலையில், முன்னாள் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது அமைச்சரவை மறுசீரமைப்பு இன்று இடம்பெறவுள்ள நிலையிலேயே ஜனாதிபதியும் முன்னாள் நீதியமைச்சரும் அங்கு சென்றுள்ளனர்.