பண்டாரகம - றைகம் - கெந்தமண்டிய பிரதேசத்தில் 5.330 கிராம் ஹெரோயினுடன்  இருவர்  நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சந்தேக நபர்கள் 26 மற்றும் 23 வயதான கணவன், மனைவி என பொலிஸார் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக  மேலதிக விசாரணைகளை பண்டாரகம  பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.