வவுனியா பாடசாலையில் ஆபத்தான குளவிகள் ; விரைந்து நடவடிக்கை எடுக்கவும்

Published By: Priyatharshan

30 Apr, 2018 | 02:56 PM
image

வவுனியா விபுலாநந்தாக்கல்லூரியில் ஆபத்தான குளவிகள் காணப்படுவதாக அப்பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

சுமார் 2000 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் அண்மைக்காலமாக ஆபத்தான தேனி வகையை சேர்ந்த பாரிய குளவிகள் கூட்டமாக தங்குவதாகவும் அதனை தம்மால் அழிக்கமுடியாதுள்ளதாகவும் தெரிவித்த அதிபர் தற்போது 5 இடங்களில் இவ்வாறான குளவிக் கூடுகள் காணப்படுவதால் மாணவர்களுக்கு ஆபத்து நேரும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக வவுனியா அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்ட போதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாமையினால் நாளை பாடசாலைக்கு மாணவர்கள் வருகை தரும் பட்சத்தில் ஆபத்து நேர வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந் நிலையில் வவுனியா நீர்த்தாங்கி மற்றும் அரச ஊழியர் விடுதியிலும் பாரிய குளவிக்கூடுகள் காணப்படுகின்ற நிலையில் இக் குளவிக்கூடுகள் பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். 

எனவே ஆபத்து ஏற்படுவதற்கு முன்னர் இதனை அழிப்பதற்கு ஏதுவான நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49