சென்னை - டெல்லி இன்று பலப்பரீட்சை

Published By: Priyatharshan

30 Apr, 2018 | 02:50 PM
image

ஐ.பி.எல். இன் இன்றையப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

11 ஆவது ஐ.பி.எல். போட்டிகள் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில் இன்றைய 30 ஆவது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதவுள்ளன.

இப் போட்டி புனேயில் இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

இதுவரை நடந்துள்ள போட்டிகளின் அடிப்படையில் சென்னை அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளில் தோல்வியுமடைந்து புள்ளிப் பட்டியலில் 2 ஆம் இடத்திலும், டெல்லி அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியும் 2 போட்டிகளில் வெற்றியும் பெற்று புள்ளிப் பட்டியலில் இறுதியிலும் உள்ளன.

இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாக அமையவுள்ளது.

டெல்லி அணிக்கு புதியத் தலைவராக பொறுப்பேற்ற ஷ்ரேயஸ் ஐயர் தனது முதல் போட்டியிலேயே வெற்றி பெற்ற அதே உத்வேகத்துடன் இன்றையப் போட்டியிலும் டெல்லி அணியை வழிநடத்தவுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துக் கொண்ட சென்னை அணி கடந்த போட்டியில் மும்பை அணியிடம் எதிர்பாராதவிதமாக தோல்வியைத் தழுவினாலும் அனுபவம் மிக்க பலமான அணியாகவே உள்ளது.

இன்றையப் போட்டியில் சென்னை அணி விளையாடுவதால் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாமல் இப் போட்டி அமையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49