ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்ற இருவேறு குண்டுத் தாக்குதல்களில் 21 பேர் பலியானதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் முதலாவது குண்டு வெடிப்பு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகதிற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக  அவ்விடத்திற்கு சென்ற ஊடகவியளாலர்களை குறிவைத்து இரண்டாவது குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இக் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்தின்  பிரதான புகைப்படப்பிடிப்பாளர் உள்ளிட்ட  3 ஊடகவியளாலர்கள் இதன் போது உயிரிழந்துள்ளனர்.

இருவேறு குண்டுத் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ளநிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வடையலாமென எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இக் குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு எந்த அமைப்பினரும் இதுவரை உரிமை கோரவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.