முல்லைத்தீவு ஆண்டான்குளம் பகுதியிலுள்ள மூன்று எருமை மாட்டு பட்டிகளிலிருந்து 17 எருமை மாட்டுக் கன்றுகள் திருட்டுப்போயுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 28 ஆம் திகதி இரவில் முல்லைத்தீவு குமுழமுனை ஆண்டான்குளம் பகுதிகளிலுள்ள மூன்று எருமைமாட்டு பட்டிகளிலிருந்த எருமைமாட்டு கன்றுகள் 17 இனந்தெரியாத நபர்களினால் திருடப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.