பண்டாரவளை நீதவான் நீதிமன்ற பதிவாளர் காப்பகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பண்டாரவளை நீதவான் நீதிமன்ற பதிவாளர் காப்பகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த வழக்குகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

பாதசாரி ஒருவரினால் வழங்கப்பட்ட தகவலையடுத்து பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் இணைந்து தீயினை கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பல்வேறு கோணங்களில் பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.