லசந்த கொலையாளிகள்  தொடர்பான  ஓவியங்கள் வரையப்பட்டன :   அடையாளம் காட்ட உதவுமாறு பொது மக்களிடம் கோரிக்கை 

Published By: MD.Lucias

17 Feb, 2016 | 03:06 PM
image

 (எம்.எப்.எம்.பஸீர்)

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை   இரத்மலான அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் வைத்து சுட்டுக்கொன்ற, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் உருவ அமைப்பை சாட்சியங்களின் அடிப்படையில் பொலிஸார் தற்போது வரைந்துள்ளனர். 

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சாட்சியங்கள் மற்றும் சாட்சியாளர்களின் தகவல்களுக்கு அமைவாக பொலிஸ் குற்றப் பதிவுப் பிரிவின் ஓவிய நிபுணர்களால் இந்த உருவங்கள் வரையப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். 

சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காகவே இவ்வாறு அவர்களது உருவங்கள் வரையப்பட்டுள்ளதாகவும் இந்த உருவ அமைப்பை ஒத்தவர்களை காணுமிடத்து அது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் வழங்குமாறும் பொது மக்களைக் கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.  

சாட்சியாளர்களின் தகவல்கள் பிரகாரம் வரையப்பட்டுள்ள முதலாவது சந்தேக நபர் 35 வயது மதிக்கத்தக்கவர்  எனவும் , 5 அடி 8 அங்குலம் வரையிலான உயரம் கொண்டவர் எனவும் கண்கள் கபில நிரத்தை உடையன என்றும்  பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். 

அத்துடன் அவர் வெள்ளை நிற கட்டுடலைக் கொண்டவர் எனவும்  பேச்சாளர்  சுட்டிக்காட்டினார். அத்துடன் சாட்சியங்களின் பிரகாரம் வரையப்பட்டுள்ள இரண்டாவது சந்தேக நபர் சுமார் 40 வயது மதிக்கத்தக்கவர் ஆவார். அவர் கறுப்பு நிற, பருமனான உடல் அமைப்பைக் கொண்டுள்ளதுடன் 5 அடி 10 அங்குலம் வரையிலான உயரம் கொண்டவர் என பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார்.

அதன்படி குறித்த நபர்கள் தொடர்பில் எவரேனும் சரியான தகவல் ஒன்றினை அறிந்தால் அதனை உடனடியாக 0718591753,  0718591770 அல்லது  0773291500 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத் தருமாறு பொது மக்களிடம்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11