வட சீனாவிலுள்ள பாடசாலையொன்றில்  ஏழு மாணவர்களை கத்தியால் குத்தி  கொலை செய்த பாடசாலை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட சீனாவில் ஷாங்க்ஸி மாகாணத்திலுள்ள பாடசாலையொன்றில் ஏழு மாணவர்களை கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 12 பாடசாலை மாணவிகள் காயமடைந்துள்ளனர்.  

குறித்த நபர் அதே பாடசாலையை சேர்ந்த 28 வயதான மாணவன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
ஏனைய பாடசாலை மாணவர்கள் தன்னை கேலி செய்து சிரித்தமையை  மனதில் வைத்து பழிவாங்கியதாக பொலிஸ் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. 

குறித்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை சீன பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.