19 வயதின்கிழ் கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் இளவாழை ஹென்றியரசர், கொழும்பு ஸாஹிரா

Published By: MD.Lucias

17 Feb, 2016 | 02:17 PM
image

(நெவில் அன்தனி)புனித ஹென்றியரசர் அணி வீரர் ஞானேஸ்வரன் அன்தனிராஜைக் கட்டுப்படுத்துவதற்கு திருச்சிலுவை அணியின் இரண்டு வீரர்கள் முயிற்சிக்கும் காட்சி.

பாடசாலைகளின் 19 வயதுக்குட்பட்ட  அணிகளுக்கு இடையிலான கொத்மலை கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாடுதற்கு யாழ். இளவாழை புனித ஹென்றியரசர் அணியும் கொழும்பு ஸாஹிரா அணியும் தகுதிபெற்றுள்ளன.

இந்த இறுதிப் போட்டி கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் நாளை மறுதினம்வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.

இதற்கு முன்னோடியாக நேற்று  நடைபெற்ற அரை இறுதிப் போட்டி ஒன்றில் களுத்துறை, திருச்சிலுவை அணியை சந்தித்த யாழ். ஹென்றியரசர் 8 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் மிக இலகுவாக வெற்றிகொண்டது.

போட்டியின் முதலாவது பகுதியில் மிகுந்த சாதுரியத்துடன் விளையாடி 32ஆவது நிமிடத்தில்  அல்பிரட் பெனடிக்ட் அனோஜன் மூலம் முதலாவது கோலை ஹென்றியரசர் அணி போட்டது.

இடைவேளைளயின் பின்னர் முழுமைாயன ஆதிக்கம் செலுத்திய புனித ஹென்றியரசர் அணி மேலும் ஏழு கொல்களைப் போட்டு அபார வெற்றியீட்டியது.

அனோஜன் (50 நி., 85 நி.), ஞானேஸ்வரன் அன்தனிராஜ் (63 நி.), அல்பிரட் தனேஷ் (70 நி.), ரெக்சஸ் அமலதாஸ் மதூசன் (82 நி.) ஆகியோர் கோல்களைப் போட்டதுடன் தனேஷ் உதைத்தப் பந்தின் மூலம் திருச்சிலுவை பின்கள வீரர் கோவிந்த சுதீப் இரண்டு சொந்தக் கோல்களைப் போட்டுக்கொடுத்தார்.

ஸாஹிராவுக்கு இறுக்கமான வெற்றி

ஸாஹிரா அணிக்கும் கட்டுநேரிய புனித செபஸ்தியார் அணிக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் 2 க்கு 0 என ஸாஹிரா வெற்றிபெற்றது.

போட்டி ஆரம்பித்து 3 நிமிடங்கள் ஆனபோத எம். ஷவ்ரான் மிக அலாதியாக கோல் ஒன்றைப் போட்டு ஸாஹிராவை முன்னிலையில் இட்டார். 

அதன் பின்னர் இரண்டு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்டன.

போட்டியின் 76ஆவது நிமிடத்தில் புனித செபஸ்தியார் அணியின் பின்களத்தில் ஏற்பட்ட தவறைப் பயன்படுத்திக்கொண்ட எம். ஆக்கிப், ஸாஹிராவின் இரண்டாவது கோலைப் போட்டார்.

இடைவேளையின் பின்னர் இரண்டு அணியினரும் கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சிகளை எடுத்துக்கொண்போதிலும் அவை கைகூடாமல் போயின.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35