தெற்காசிய வலய நாடுகளுக்கான விளையாட்டு போட்டிகள் அண்மையில் நேபாளத்தில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான பளுத்தூக்கும் (ஜுடோ) போட்டியில் கம்பளை பொலிஸ் நிலையத்தின் பெண் உத்தியோகத்தரான வாசனா சந்தமாலி 63 கிலோ எடை பிரிவில் பளுத்தூக்கி மூன்றாம் இடத்தை தக்கவைத்து இலங்கைக்கும் இலங்கை பொலிஸ்க்கும் பெருமை சேர்த்துள்ளார்.

வாசனா சந்தமாலியை வரவேற்கும் நிகழ்வு நேற்று கம்பளை நகரில் நடைபெற்றது. இதன்போது வாகன பேரணியாக அழைத்து வரப்பட்ட இவரை மக்கள் ஆராவராத்துடன் வரவேற்றனர்.

இதில் கம்பளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.யாப்பா, பொலிஸ் உத்தியோகத்தர்கள், கம்பளை பிரதேச செயலாளர், கம்பளை நகர சபை உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.