நோட்டன் பிரிட்ஜ்  அங்ராம்பிட்டிய வழியான கலுகல மார்க்கத்திற்கான  பாதையை புனரமைக்ககோரி சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரை போக்குவரத்து முற்றாக தடைப்பட்ட நிலையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர். 


பாதையை புனரமைக்ககோரி முன்னெடுக்கப்பட்ட வீதி மரியல் போராட்டத்தினால் நோட்டன் பிரிட்ஜ்  அங்ராம்பிட்டிய வழியான கலுகல மார்க்கத்திற்கான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டிருந்தது.
நான்காம் கட்டை சப்பத கன்னியா ஜம்புகஸ்தலாவ, ஹங்காராம்பிட்டிய, கலுகல ஆகிய பிரதேசங்களை மக்கள் பயன்படுத்து பிரதான பதையை புனரமைக்ககோரியே குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

 
சிவனொளி பாதமலைக்கு இலகுவாக பயணிக்கும் குறித்த பாதை நீண்டகாலமாக புனரமைக்கபடாமல் குண்டும் குழியுமாக காணப்படுதாக ஆர்பாட்டட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.


 

குறித்த பிரதேச கிராம மக்களும், தோட்டமக்களும், இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைத்தந்த நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் உரையாடி விரைவில் குறித்த பாதையை புனரமைத்து தருவதா தொலை நகலினூடாக தெரிவித்த நிலையில் தொலை நகல் பிரதியை ஆர்பாட்டத்தில் ஈடுட்டோரிடம் பொலிஸார் காட்டியதையடுத்து ஆர்பாட்ட கரர்கள் கலைந்து சென்றனர் மேற்படி ஆர்பாட்டத்தினால் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரை போக்குவரத்து தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது