ஹஷீஸ் போதைப்பொருடன் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப்பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 5 கிலோகிராம் ஹஷீஸ் போதைப்பொருளுடன் குறித்த இத்தாலி நாட்டுப்பெண் கைதுசெய்யப்பட்டள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட பெண் இன்று காலை தாய்லாந்து நோக்கி செல்லமுற்பட்ட போதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பெண் 32 வயதுடையரென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பெண்ணின் பயணப்பொதியை சோதனையிட்ட விமானநிலைய சுங்க அதிகாரிகள் அதிலிருந்து ஹஷீஸ் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.