பெருந்தொகையான தங்கங்களை இந்தியாவுக்கு கடத்த முயன்ற 3 பெண்கள் உட்பட நால்வரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நால்வரும் 1.5 கிலோ கிராம் நிறையுடைய 89 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கங்களை இந்தியாவின் மும்பைக்கு கடத்த முயன்றபோதே விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் காலி , கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் பிரதேசங்களை சேர்ந்தவர்களென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

கடத்தல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை விமானநிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.