பெண் வீட்டார் உறுதியளித்தபடி, வரதட்சணையை கொடுக்காததால் கோபமடைந்த கணவன் தன் மனைவியை ஆபாச பட இயக்குனருக்கு விற்ற விவகாரம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் சரண் மாவட்டத்தைச் சேர்ந்த கவிதாவுக்கும் ஹரியானாவை சேர்ந்த படிகருக்கும், கடந்த ஒன்றரை மாதத்திற்கும் முன் திருமணம் நடைபெற்றது. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 

மணமகன் வீட்டார்கள், திருமணமான முதல் நாளில் இருந்தே குறித்த பெண்ணை சித்திரவதை செய்துவந்துள்ளனர். குறித்த பெண்ணும் அதை பொறுத்துக் கொண்டு அவர்கள் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.

சித்திரவதையின் உச்சமாக, மனைவியை ஆபாச படம் எடுக்கும் ஒருவருக்கு படிகர் ரூ.7 இலட்சத்திற்கு விற்றுள்ளார். 

குறித்த கும்பலிடம் இருந்து தப்பி வந்த அந்த பெண், பொலிஸ் நிலையத்தில் இதுபற்றி கண்ணீர் மல்க புகார்அளித்துள்ளார்.

இதனையடுத்து, படிகரின் குடும்பத்தினர் அனைவரும் தலைமறைவாகியுள்ளனர். 

இதுதொடர்பாக, தரைய்யா பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.