பெரு நாட்டில் பலிகொடுக்கப்பட்டதாக கருதப்படும் குழந்தைகளின் எச்சங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மனித வரலாற்றில் பாரியளவில் குழந்தைகள் பலிகொடுக்கப்பட்ட சம்பவமாக இது இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பெரு நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியில் இந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன இவை கிட்டத்தட்ட 140 குழந்தைகளுக்கும் அதிகமானோர் பலிகொடுக்கப்பட்டிருக்கலாம்  அத்தோடு இவை 550 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என அந்த ஆய்வில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.