பொகவந்தலாவ - செல்வகந்த தோட்டபகுதியில் வீடு ஒன்றில் இருந்து விற்பனைக்காக வைக்கபட்டிருந்த 50 மதுபான போதல்களுடன் ஒருவர் இன்று காலை 5.30 மணியளவில் கைது செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பொலிஸாரால் மேற்கொள்ளபட்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டள்ளதுடன் 50 மதுபான போத்தல்களும் மீட்கபட்டதாக தெரிவிக்கபடுகிறது.

வெசாக் வாரத்தை முன்னிட்டு மதுபான கடைகள்  ஒரு வார காலத்திற்கு மூடப்படுவதால் அந்  நாட்களில் விற்பனை செய்வதற்காகவே  மதுபான போத்தல்கள் மறைத்து வைக்கபட்டிருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது .

குறித்த சந்தேக நபருக்கு பொகவந்தலாவ பொலிஸாரால் இன்று காலை பினை வழங்கபட்டு எதிர்வரும் செவ்வாய் கிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு பொகவந்தலாவ பொலிஸாரால் உத்தரவு பிரப்பிக்கபட்டுள்ளமை குறிப்பிடதக்கது .

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது