வெசாக் நோன்­மதி தினத்தை முன்­னிட்டு 29 மற்றும் 30 ஆம் திக­தி­களில் நாட்டின் சகல மது­பான சாலை­களும் மூடப்­பட வேண்டும் என அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. 

அதேபோல் சட்­ட­வி­ரோத மது­பான  விற்­ப­னைகள் குறித்த விசேட கண்­கா­ணிப்­பு­க­ளையும்  மது­வரித் திணைக்­களம் முன்­னெ­டுக்­க­வுள்­ ளது. 

பௌத்­தர்­களின் புனித தின­மான வெசாக் நோன்­மதி வாரம் ஆரம்­ப­மா­கி­யுள்ள  நிலையில் 29 மற்றும் 30 ஆம் திக­தி­களில் வெசாக் தினம் அனுஷ்டிக்­கப்­ப­ட­வுள்­ளது. நேற்று முதல் ஆரம்­ப­மா­கிய வெசாக் வாரம் மே 3 ஆம் திகதி வரை அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது. 

இந்­நி­லையில் நாளை மறு­தினம் 29 ஆம் திகதி மற்றும் 30 ஆம் திகதி ஆகிய இரண்டு தினங்­களில் நாட்டில் சகல மது­பான சாலை­களையும் மூடு­மாறும் மது­பானம் விற்­பனை செய்­வதை 29,30 ஆம் திக­தி­களில் நிறுத்­து­மாறும் இறைச்சிகடைகளை மூடுமாறும் அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக் கது.