பேருவளை - மஸ்ஸல பிரதேசத்தின் இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியில் இருந்து  இன்று மாலை  எரிந்த நிலையில் சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணினது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர்  நீண்ட காலமாக குறித்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாகொடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.